Latestமலேசியா

நாட்டில் புதிதாக 5 பேருக்கு கோவிட்-19 தொற்று; அனைவரும் மலேசியர்கள்

புத்ராஜெயா, ஜூலை 3 – கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று கண்டுள்ளது. தொற்று கண்ட அனைவரும் மலேசியர்கள் என சுகாதாரத் துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா கூறியுள்ளார்.
அந்த ஐவரில் மூவர் வெளிநாட்டில் இத்தொற்றுக்கு உள்ளான நிலையில் இருவருக்கு உள்நாட்டில் இத்தொற்று கண்டுள்ளது. இன்று 9 பேர் குணமடைந்ததோடு இன்னமும் 81 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். தொற்று கண்ட ஒட்டுமொத்த 8648 பேரில் 97.7 விழுக்காட்டினர் அதாவது 8446 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
மரண எண்ணிக்கை தொடர்ந்து 121ஆக இருந்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!