Latestமலேசியா

நான் துரோகிகளோடு திட்டம் எதுவும் தீட்டவில்லை – அன்வார்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 30 – நான் துரோகிகளோடு திட்டன் எதுவும் தீட்டவில்லை என PKR கட்சித் ஹலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். சில தரப்பினர் நான் துரோகம் இழைத்தவர்களோடு சேர்ந்து புதுத்திட்டம் போட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், அது உண்மையல்ல. பதவிக்காக ஏங்கும் சிலரின் சதிவேலை இதுவென அன்வார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மொஹிடின் யாசின் மற்றும் உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினோடு நடத்தப்பட்ட சந்திப்பில் PKR பற்றியோ பக்காதான் ஹராப்பான் பற்றியோ தாம் பேசவில்லை என்றும் அவர் கூறினார்.
பக்காதான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்வதற்கு மூலக்காரணமாக இருந்த ஹம்சா ஜைனுடினுடன் எந்த ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதை தாங்கள் முற்றிலும் நிராகரிப்பதாக அமனா மற்று DAP கட்சிகள் கூட்டாக தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!