Latestமலேசியா

நாளை முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் HDயில் ‘கள்வனைக் கண்டுப்பிடி’ – புத்தம் புதிய உள்ளூர் தமிழ் தொடர்

கோலாலம்பூர், ஜூன் 30 – ‘கள்வனைக் கண்டுப்பிடி’ எனும் புத்தம் புதிய உள்ளூர் அமானுஷ்ய தொடரை ஜூலை 1 முதல் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் HD (அலைவரிசை 231) வாயிலாக தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் கண்டு களிக்கலாம்.
இயக்குனர் கார்த்திக் ஷாமலன் கைவண்ணத்தில் ‘கள்வனைக் கண்டுப்பிடி’ தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் உள்ளூர் தமிழ் அமானுஷ்ய தொடர் இதுவாகும். மலேசியர்கள் அனைவரும் இத்தொடரைக் கண்டு களிப்பர் என்று நாங்கள் நம்புகிறோம். மலேசியர்கள் உள்ளூர் திரைப்படத் துறைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதோடு, ஆஸ்ட்ரோ வழங்கும் அறிய வாய்ப்புகளைப் பாராட்டுவார்கள் எனவும் பெரிதும் நம்புவதாக இயக்குனர் கார்த்திக் ஷாமலன் தெரிவித்தார்.

லிங்கேஸ்வரன் மணியம், பாஷினி சிவகுமார், மகேன் விகடகவி, கே.எஸ். மணியம், காந்தீபன்@பென் ஜி, ராஜ் கணேஷ், ரவின் ராவ், சந்திரன், சங்கபாலன், ஆர். மோகன ராஜ், கெ.பி.தி (பி.ஏ) ராமசுந்தரன், சுபாஷினி அசோகன், ரேன்னி மார்ட்டின் மற்றும் சாய் கோகிலா ஆகியோர் நடித்துள்ள இந்த தொடர் மொத்தம் 26 அத்தியாயங்களை கொண்டுள்ளது.

தனது காதலியின் கொலைக்குப் பிறகு வாழ்க்கையில் ஆர்வத்தை இழந்த, குற்ற உணர்ச்சியில் வாடும் விஷான்கவேல் ராஜமூர்த்தி (விஷான்) பற்றிய சுவாரஸ்யமானக் கதைதான் இந்த ‘கள்வனைக் கண்டுப்பிடி’. அவர் இறுதியாக ஒரு முறை அவளது ஆத்மாவுடன் தொடர்புக் கொள்ள முயற்சிக்கும் வேளையில் இறந்தவர்களுடன் பேசும் அமானுஷ்ய சக்திகளைப் பெறுகிறார்.

கொலை வழக்குகளைத் தீர்க்கும் ஒரு தனியார் துப்பறியும் நபராக அவர் ஒரு வேலையை ஏற்றுக் கொள்கிறார். அவ்வேளையில், ஓர் ஆத்மா விடுவிக்கப்பட்டு விஷானுக்கு எதிராக பழிவாங்க முற்படும்போது அமானுஷ்ய உலகில் விஷயங்கள் சிக்கலாகின்றன.
ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வியாபாரம் (விண்மீன்) மற்றும் மின்னியல் உதவித் துணைத் தலைவர் குப்புசாமி சந்திரகாஸ் கூறுகையில், “உள்ளூர் உள்ளடக்கத்தில் நாங்கள் தொடர்ந்து முதன்மை வகிப்பதால், எங்களின் முதன்மை நோக்கமே வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான தரமான உள்ளூர் உள்ளடக்கங்களை வழங்குதல் ஆகும்.

‘கள்வனைக் கண்டுப்பிடி’ தொடங்கி ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் பல்வேறு புதிய உள்ளூர் தமிழ் தொடர்களை ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) கண்டு மகிழலாம். திறன்மிக்க உள்ளூர் களைஞர்களுக்கு அவர்களின் உயர்தரத் தொடர்கள் மற்றும் திரைப்படங்களைத் திரையிட அறிய வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் எங்களின் வாடிக்கையாளர்கள் எதிர்வரும் அற்புதமான புத்தம் புதிய நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்வார்கள் என நாங்கள் பெரிதும் நம்புகிறோம்.” மேல் விபர்களுக்கு, ஆஸ்ட்ரோவின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை வலம் வாருங்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!