Latestமலேசியா

நீராவி குளியல், உடம்பு பிடி மையங்கள் இன்று முதல் செயல்பட அனுமதி

கோலாலம்பூர், ஜூலை 1 – நாட்டில் கோவிட்-19 தொற்று சீற்றத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட உத்தரவு அமல்படுத்தப்பட்டது. MCO தொடங்கப்பட்டு 106 நாட்களுக்குப் பின்னர் மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டு தற்போது 22-ஆவது நாளை எட்டியுள்ளோம். இந்நிலையில் ஜூலை 1ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் பெரும்பாலான பல துறைகள் செயல்பட தொடங்கி விட்டன. பாலர் பள்ளிகள் , சுற்றுலாத் துறை, நீர் பூங்கா விளையாட்டு மையங்கள், திரையரங்குகள் என பல தொழில்துறைகளும் நிற்ணயிக்கப்பட்ட SOP விதிமுறைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

அந்த வகையில் SPA எனும் நீராவி குளியல் மற்றும் உடம்புபிடி மையங்களும் நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளுடன் திறக்கப்படலாம் என தற்காப்பு துறைக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். அதே சமயம் அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்வி கூடங்கள் திறக்கப்படுவது குறித்து உயர்கல்வி அமைச்சு பின்னர் அறிவிக்கும் எனவும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!