Latestமலேசியா

நீரிழிவுக்கு உள்ளான தந்தையை பார்க்கச் செல்வதாக பொய் கூறி மாநிலத்தை கடந்த ஆடவருக்கு ரிம1,000 அபராதம்

அலோஸ்டார், மே 22 – நீரிழிவுக்கு உள்ளான தந்தையை கிராமத்திற்கு சென்று பார்க்கப்போவதாக கூறி மாநில எல்லையை கடந்து வந்த ஆடவர் ஒருவருக்கு 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. மலாக்காவில் வேலை செய்துவந்த சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் அனுமதியின்றி எல்லையை கடந்து வந்துள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கோத்தா சாராங் செமுட்டிலுள்ள கம்போங் பஹாகியாவிலுள்ள ஒரு வீட்டிற்கு சென்று பாரக்கும் படி ஓப்ஸ் கோவிட்-19 பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரருக்கு உத்தரவிடப்பட்டதாக யான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடண்ட் ஷானஸ் அக்தார் கூறினார்.
போலீஸ் விசாரணையில் 37 வயதான அந்த ஆடவர் நான்கு நாட்களுக்கு முன் மலாக்கா மாநிலத்தை கடந்து யானுக்கு அருகேயுள்ள கம்போங் பஹாகியாவுக்கு வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் அந்த ஆடவர் எந்தவொரு அனுமதி கடிதத்தையும் கொண்டிருக்கவில்லையென போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேல் நடவடிக்கைக்காக அந்த ஆடவர் யான் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அந்த ஆடவருக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!