Latestமலேசியா

நெடுஞ்சாலையில் விபத்து: விமானி மரணம்

கோலாலம்பூர், ஜூலை 9 – NKVE நெடுஞ்சாலையின் 22. 1ஆவது கிலோமீட்டரில் விடியற்காலை 5.30 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் விமானி ஒருவர் மரணம் அடைந்தார். கோலாலம்பூரிலிருந்து ஷா ஆலாமை நோக்கி அவர் ஓட்டிச் சென்ற கார் லோரியின் பின்னால் மோதியது.

இதனால் தமது இருக்கையில் சிக்கிக்கொண்ட அந்த கார் ஓட்டுர் மரணம் அடைந்ததாக சிலாங்கூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறையின் தலைவர் சூப்பிரிடன்ட் அஸ்மான் ஷாரியாட் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

இந்த விபத்தில் மரணம் அடைந்தவர் 35 வயதுடைய முகமட் ஹபிஸ் என்ற விமானியாவார். இவர் கே.எல்.ஐ.ஏ 2இல் ஏர் ஆசிய விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வந்ததாக சூப்பிரிடன்ட் அஸ்முன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இதனிடையே இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் இன்ஸ்பெக்டர் முகமட் ஹபிஸ் பீஷால் என்பவருடன் 011 32311232 தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!