Latestமலேசியா

பக்காத்தானில் பலவீனம் இருந்தது; ஆனால் அதிகார வரம்பு மீறல் இல்லை – அன்வார் தம்பதியர்

கோலாலம்பூர், மே 9 – பக்காத்தான் ஹராப்பானிடம் பலவீனம் இருந்தது. ஆனால் அதிகார வரம்பு மீறல் மற்றும் அலட்சியம் இருந்ததில்லையென பி.கே.ஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார் டாக்டர் வான் அஸிஸா தெரிவித்தனர். பக்காத்தான் ஹராப்பான் அதிகாரத்திற்கு வந்த பின் பல ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டன. அமைச்சரவையில் மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்கள் அதிகமாக இருந்ததால் கவலையும் இருந்தது என முகநூல் நேரலையில் அன்வார் தெரிவித்தார். 14ஆவது பொதுத்தேர்தலின் இரண்டாது  ஆண்டு நிறைவு விழாவில்  கலந்துகொண்டபோது அன்வார் இதனை தெரிவித்தார்.  2019ஆம் ஆண்டு மே மாதம்  9ஆம் தேதி நடைபெற்ற  14ஆவது பொதுத் தேர்தலில்  எதிர்க்கட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

எங்களிடம் சில பலவீனங்கள் இருந்தன. சில சமுக நலத் திட்டங்களை மிகவும் ஆக்கப்பூர்வமாக அல்படுத்தியிருக்க வேண்டும்  என நான் கருதுகிறேன்.  ஆனால் பக்காத்தான் ஹரப்பான் நிர்வாகத்தில் அலட்சியம் இருந்ததில்லை என அவர் சொன்னார். அம்னோ, பாஸ் மற்றும்  காபோங்கான் பார்ட்டி சரவா ஆகிய எதிர்க்கட்சிகள் எங்களது பலவீனதை   பயன்படுத்தி அதனை பூதகரமாக  படம் பிடித்துக்காட்டின.  எனினும் மலாய்க்கார்ர்களின் உரிமைமகள், மொழி மற்றும் சமயம் போன்ற விவகாரங்களை  நாங்கள் புறக்கணித்து கிடையாது என  அன்வார் சொன்னார் .

இதனிடையே பக்காத்தான் ஹரப்பானில் பல அமைச்சர்கள் இருந்தபோதிலும்  அவர்கள் அரசாங்கத்தில் அனுபவமின்றி இருந்த்தாக 14ஆவது பொதுத் தேர்தலின்போது  பி.கே.ஆரின்  தலைவராக இருந்தவருமான  டாக்டர் வான் அஸிஸா தெரிவித்தார்.  கடந்த பொதுத் தேர்த்தலில் தேசிய முன்னணியை பி.கே.ஆர் வீழத்தியது குறித்து வினவப்பட்டபோது  இது எங்களது போராட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற வெற்றியாகும் என்றார். இந்த வெற்றியினால் நாங்கள்   வரலாற்றை ஏற்படுத்தினோம்.  புதிய அரசாங்கம் அமைப்பதற்கான கௌரவம் கிடைத்த்து என பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரமான  வான் அஸிஸா  தெரிவித்தார். நாட்டில் துணைப்பிரதமர் பதவியை ஏற்ற முதல் பெண் என்ற வராற்றை ஏற்படுத்தியதற்காக  தாம்  பெருமைப்படவதாகவும்  கூறினார்

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!