Latestமலேசியா

பக்காத்தான் தலைவர்கள் நேற்றிரவு மீண்டும் சந்திப்பு நடத்தினர் – அன்வாரும் கலந்துகொண்டார்.

கோலாலம்பூர், ஜூன் 5 – பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் நேற்றிரவு தங்களுக்கிடையே இரண்டாவது கூட்டத்தை நடத்தினர். அந்த சந்திப்பில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரும் பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்டார். .பக்காத்தான் தலைவர்கள் நேற்று  மாலையில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீருடன் கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் சபா வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டால் கலந்துகொண்டார். ஆனால்  அன்வார் இப்ராஹிம்  மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் எருவம்  கலந்துகொள்ளவில்லை.

விரைவில் பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணி கூட்டரசு அரசாங்கத்தை  கைப்பற்றும் என ஆருடங்கள் தீவிரமடைந்துவரும் இவ்வேளையில்  அந்த கூட்டணியை வலுப்படுத்துவதற்கான வியூகங்கள் தொடர்பாக  நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அன்வார் தலைமையில் நடைபெற்ற   இந்த கூட்டத்தில்   டி.ஏ,பி  தலைமைச் செயலாளர்  லிம் குவான் எங், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் ,  அமனா கட்சியின் தலைவர் முகமட் ஷாபு,  பி.கே.ஆர் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் நசுட்டியோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.  இந்த கூட்டம் தொடர்பான புகைப்படங்களும்  பக்காத்தான் ஹராப்பான்  டுவிட்டர்  கணக்கில் பகிரப்பட்டன.

அனைத்து முடிவகளும் கருத்திணக்கத்தின் பேரிலேயே  இருக்கும் என  அந்த முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தியில் கூறப்பட்டிருந்தது.  இறைவனின்  கருணையில் வெகு விரைவில்  பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில்  சபா வாரிசான் கட்சியும்  இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பெர்சத்துவில்  டாக்டர் மகாதீர் தலைமையிலான அணியைச் சேர்ந்தவர்களும்  பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.  கடந்த பிப்ரவரிமாதம்  ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் ஆட்சியை இழந்த பக்காத்தான் இப்போது மீண்டும்  நாடாளுமன்ற் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

எனினும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் தேர்வில் அந்த கூட்டணியில் இன்னமும்   தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் டாக்டர் மகாதீர் மற்றும் அன்வார் ஆகிய இருவருக்கிடையே இன்னமும்  சர்ச்சை இருந்து வருவதாகவும்  தெரிகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!