Latestஇந்தியாஉலகம்

பசியின்  கொடுமை உச்சக் கட்டம்; நாயின் இறைச்சியை பிய்த்து எடுத்து உட்கொள்ளும் ஆடவர்

புதுடில்லி, மே 23 – பசியின் கொடுமை உச்சத்தில் இருக்கும் ஒருவர் இறந்த நாயின் இறைச்சியை பிய்த்து எடுத்து சாப்பிடும் நெஞ்சை உருக்கும் காட்சி சமுக வலைத்தலங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா முழுவதிலும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் பலர் வேலை இழந்துள்ளனர்.  சிலர் கால்நடையாகவே  சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கின்றனர். இப்படிப்பட் சூழ்நிலையில் அவர்கள் எதிர்நோக்கும்  பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட  காணொளிகள் சமுக வலைத்தலங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்   ராஜஸ்தான் சாலையில்   பிரதுமான்  சிங் நருகா என்ற இளைஞர் காரில் சென்றபோது ஆடவர் ஒருவர்  சாலையில் செத்து கிடந்த நாயை பிய்த்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதனை தொடர்ந்து அந்த நபரின் அருகே  சென்று நாய் இறைச்சியை பிய்த்துக்   சாப்பிட்டுக்கொண்டிருக்கும் காட்சியை தமது கைதொலைபேசியில்  வீடியோ எடுத்துள்ளார்.

இந்த காட்சியை பல வாகன ஓட்டிகள்  பார்த்தபோதிலும் யாரும் இதனை பொருட்படுத்தவில்லை. இந்த வீடியோவை எடுத்த   நருகா அந்த நபரிடம் சென்று  சாப்பிட எதுவும் இல்லையா?  இதை சாப்பிட்டால்  செத்து போய்விடுவாய் என்று கூறுகிறார். அதற்கு அந்த இளைஞர் பதில் சொல்லாமல் மெளனம் சாதிக்கிறார்.  அதன் பிறகு அந்த நபரை  சாலையோரம் அழைத்துச் சென்று  சிறிது சாப்பாடும்   குடிக்க தண்ணீடும்   வழங்குகிறார்.   யாராவது  இதுபோன்ற நபர்களை பார்த்தால் அவர்களுக்கு  தயவு செய்து உதவுங்கள் என்று   வீடீயோவுடன் சேர்த்த  பதிவையும்  செய்திருந்தார்.  இந்த வீடியோ பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செத்த நாயை சாப்பிட்டவர் யார் என்று தெரியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவராகவும் காணப்படுகிறார். பசிக் கொடுமையால் எதை சாப்பிடுவது என்று தெரியாமல்  அவர் நாய் இறைச்சியை சாப்பிட்டது மக்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!