Latestமலேசியா

பணியாளருக்கு கோவிட்-19 தொற்று; ஆஸ்ட்ரோ ஒளிபரப்பு மையம் 2 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும்

புக்கிட் ஜாலில், ஏப் 6 – சக பணியாளருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து தனது ஒளிபரப்பு மையத்தை 2 நாட்களுக்கு தற்காலிகமாக ஆஸ்ட்ரோ நிறுவனம் மூடியுள்ளது.

வெளிப்புற ஒளிப்பரப்பு வாகனம் எனப்படும் OB Truck குழுவில் வேலை செய்யும் அந்த நபருக்கு ஏப்ரல் 5ஆம் திகதி கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது அந்த நபர் அரசாங்க மருத்துவமனையில் சிக்கிச்சைப் பெற்று வருவதாக ஆஸ்ட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் முயர்சியில் தற்போது இறங்கியுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

அதோடு, பாதுகாப்பு நடவடிக்கையாக ஒளிபரப்பு மையத்தை தூய்மைப்படுத்தும் முயற்சிக்கு 2 நாட்கள் மூடப்படும் எனவும் அது குறிப்பிட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!