Latestசினிமா

பரவை முனியம்மா காலமானார்

சென்னை, மார்ச் 29 – தமிழ் திரையுலகில் நடிகையாகவும் நாட்டுப்புற பாடகியாகவும் வலம்வந்த பரவை முனியம்மா தமது 83ஆவது வயதில் காலமானார்.

50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரையைப் பதித்த பரவை முனியம்மா பாடல்களையும் பாடி ரசிகர்களை அசத்தியிருக்கிறார் பாடியிருக்கிறார்.

தூள், சண்டை, காதல் சடுகுடு உட்பட பல்வேறு படங்களில் பரவை முனியம்மா நடித்திருக்கிறார். இது தவிர மேடை நிகழ்ச்சிகளிலும் அவர் பாடல்களை பாடி வந்துள்ளார்.

நடிகர் விக்ரமிற்காக சிங்கம்போல பாடல் என்ற பாடலை பாடி இவர் பிரபலம் ஆனவர். அதன் பிறகு படங்களிலும் அவர் நடித்து வந்தார்.

சிறுநீரக கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக உடல் நலமில்லாமல் இருந்த பரவை முனியம்மா இன்று அதிகாலை 2 மணியளவில் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அவரது மரணச் செய்தியை அறிந்து நடிகர்கள் மட்டும் திரையுலகப் பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!