Latestமலேசியா

 பல மார்க்கெட்டுகள் மூடப்பட்டதால் காய்கறிகள் பற்றாக்குறையால் மக்கள் தவிப்பு

கோலாலம்பூர், ஏப் 30 – பெட்டாலிங் ஜெயா மற்றும் கோலாலம்பூரில் காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யும் பல சந்தைகள் மூடப்பட்டதால் போதுமான காய்கறிகள் இன்றி பயனீட்டாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள பல மாநிலங்களில் காய்கறிகள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செலயாங்கில் கோலாலம்பூர் மொத்த சந்தை சில நாட்கள் மூடப்பட்ட பின் கடந்த வாரம் திறக்கப்பட்ட போதிலும் கிருமிகளை துடைத்தொழிப்பதற்காக தூய்மைப்படுத்தும் பணிகள் உட்பட இதர சில காரணங்களுக்காக அது இன்னும் திறக்கப்படவில்லை.

இதே காரணங்களுக்காக பெட்டாலிங் ஜெயா OLD TOWN ஜாலான் ஒத்மானில் உள்ள சந்தை , தாமான் மேகா சந்தை , கோலாலம்பூரில் உள்ள Chow Kit சந்தையும் மூடப்பட்டதால் காய்கறிகள் வினியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டன.

காய்கறி பற்றாக்குறையினால் சில இடங்களில் காய்கறிகளின் விலை பயனீட்டாளர்களுக்கு அதிர்சியை ஏற்படுத்தும் அளவிற்கு அதிகமாக இருப்பதாக புகார்களும் கிடைத்துள்ளன .

சில மொத்த காய்கறி வியாபாரிகள் மற்றும் அவர்களது தொழிலாளர்கள் கோவிட் 19 தொற்றுக்கான பரிசோதனைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் 14 நாட்கள் தனித்திருக்க வேண்டியிருப்பதால் மார்க்கெட்டில் வர்த்தகத்தை திறக்க முடியாத நிலையில் இருப்பதாக கோலாலம்பூர் காய்கறிகள் மொத்த விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் வோங் கெங் பாட் (WONGK KENG FATT) கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!