Latestமலேசியா

பள்ளிகள் மீண்டும் திறப்பது தொடர்பில் நாளை அரசாங்கம் அறிவிக்கும்

கோலாலம்பூர், ஜூன் 9 – நாடு முழுவதிலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கூட்டரசு அரசாங்கம் நாளை ஜூன் 10ஆம் திகதி அறிவிக்கும் என கல்வித்துறை துணையமைச்சர் முஸ்லிமின் யஹயா (Muslimin Yahaya ) அறிவித்தார். கல்வி அமைச்சர் முகமட் ரட்ஷீ முகமட் ஜிடின் (Mohd Radzi Jidin), சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகியோருக்கிடையே இன்று பிற்பகலில் கூட்டம் நடைபெறும்.
இந்த விவகாரம் தொடர்பில் இன்று முக்கியமான கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டால் நாளை இது குறித்து அறிவிக்கப்படும் என இன்று Raja Permaisuri Bainun இடைநிலைப் பள்ளிக்கு வருகை புரிந்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார். இவ்வாண்டு முக்கிய தேர்வுகள் எழுதவிருக்கும் ஐந்தாம் படிவம் மற்றும் ஆறாம் படிவம் பயிலும் மாணவர்களுக்கு தொடக்க கட்டமாக பள்ளிகள் திறக்கப்படலாம் என முஸ்லிமின் யஹ்யா தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் 347,177 SPM மாணவர்கள் , STPM தேர்வு எழுதும் 45,586 மாணவர்கள், 2,935 SVM மாணவர்கள், 2.738 STAM மாணவர்கள் பள்ளி திறக்கப்படும்போது பள்ளிகளுக்கு வருவார்கள். பள்ளி மீண்டும் திறப்பதில் சில நன்மைகள் மற்றும் தீமைகள் இருந்தாலும் பொருத்தமான நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகள் வரையப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விதிமுறைகளை பள்ளிகள் முழுமையான பின்பற்றுவதற்கு கல்வி அமைச்சு மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உதவுவார்கள் என முஸ்லிமின் யஹயா தெரிவித்தார். எனினும் இதனை அமல்படுத்த வேண்டிய பொறுப்பையும் கடப்பாட்டையும் ஆசிரியர்கள் கொண்டிருப்பார்கள். சமுக இடைவெளியை நிலைநாட்டுவதில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வகுப்புகளும் குறைக்கப்படவிருப்பதால் அதிகமான ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!