Latestமலேசியா

பள்ளி மீண்டும் திறக்கும்போது ஒரு வகுப்பில் 17 மாணவர்கள் மட்டுமே இருப்பர்

கோலாலம்பூர், மே 12 – பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது ஒரு வகுப்பில் கூடியபட்சம் சராசரி 17 மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள் என கல்வி அமைச்சர் டாக்டர் முகமட்  ரட்ஷீ ஜிடின் ( Mohd Radzi Jidin ) கூறினார்.  வகுப்பின் அளவைப் பொறுத்து சமுக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கல்வி அமைச்சு பரிட்சார்த்த சோதனயை நடத்திவிட்டதாகவும் அவர் சொன்னார்.

சமுக இடைவெளியை பின்பற்றும் வகையில் 17 மாணவர்கள் மட்டுமே வகுப்பில் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முகமட் ரட்ஷீ தெரிவித்தார். பள்ளிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகள் மறுசீரமைக்கப்படும்.  முன்பு ஒரு வகுப்பில் 35 பேர் இருந்திருக்கலாம். ஆனால் இதே நடைமுறையை இப்போது பின்பற்ற முடியாது. சமுக இடைவெளியை கருத்திற்கொண்டு 16 முதல்  17 மாணவர்கள் மட்டுமே இப்போது ஒரு வகுப்பில் இருக்க முடியும்.  பெரிய வகுப்பறைகளில்  20 பேர்வரை அமர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என  முகமட் ரட்ஷீ கூறினார்.

இதன்வழி இதற்கு முன் ஒரு வகுப்பில் இருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை இனி இரண்டாக பிரிக்க வேண்டும். இதுதவிர   இந்த இரண்டு வகுப்புகளிலும் பாடம் எப்படி நடத்துவது என்பதையுm நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.  சிறிய அளவில் வகுப்புக்கள் இருந்தால் அதற்கு பதில் பெரிய மண்டபத்தை வகுப்புகளாக பயன்படுத்த வேண்டும். அதோடு பள்ளி சிற்றுண்டி நிலையங்களிலும் சமுக இடைவெளியை பின்பற்றுவதற்கு  நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறைகள் கடுமையாக்கப்படும் என்றும்  கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!