Latestஉலகம்

பாகிஸ்தான் விமான விபத்து – 92 பயணிகள் மரணம்; இருவர் உயிர் தப்பினர்

கராச்சி மே 23 – குறைந்தது 100 பேருடன் பயணம் செய்த பாகிஸ்தான் விமான நிறுவனத்தின் ஏர் பஸ் விமானம் ஒன்று வசிப்பிட பகுதியில் விபத்துக்குள்ளானது. அந்த விமான பயணிகளில் 92 பேர் உயிரிழந்ததுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பி.பி,சி தகவல் வெளியிட்டுள்ளது. மக்கள் நெரிச்சல்மிக்க குடியிருப்பு பகுதியில் நேற்று விமானம் விபத்துக்குள்ளானதில் தரையில் இருந்த பலரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை அந்த விமான விபத்தில் இருவர் மட்டுமே உயிர்பிழைத்ததாக கூறப்பட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் பேங்க்கின் தலைவர் ஷாபார் மாசூட்டும் உயிர் தப்பியவர்களில் ஒருவர் என என பாகிஸ்தான் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அர்ஷாட் மாமுட் மாலேக் தெரிவித்தார்,
அதிகமான கருகிய சடலங்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டன. நோன்பு பெருநாளுக்காக பாகிஸ்தான் மக்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நிகழ்ந்து. ஜின்னா அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே மக்கள் நெரிசல் மிகுந்த வீடமைப்பு பகுதியில் அந்த விமானம் அகமட் ஷா கூறினார்.

அந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளாகுவதற்கு முன் மிகப்பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக வசிப்பிடப் பகுதியிலுள்ள சிலர் தெரிவித்தனர். லாகூரில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் கராச்சியில் தரை இறங்குவதற்கு முன் விபத்துக்குள்ளானது. அந்த ஏர் பஸ் A 320 விமானத்தில் 91 பயணிகளும் எட்டு ஊழியர்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் தொடக்கத்தில் தொலைத்தொடர்பு கோபுரத்தை மோதிய பின்னர் வீடமைப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இருக்கையில் பாதுகாப்பு இடைவார் அணிந்திருந்த நிலையில் பலரது உடல்கள் கருகிக் கிடந்ததாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

2014ஆம் ஆண்டு அந்த விமானத்தை பாகிஸ்தான் விமான நிறுவனம் கொள்முதல் செய்தது, அந்த விமானத்தை செலுத்திய விமானி சஜாட் குல் நல்ல அனுபவசாலி என கூறப்பட்டது, தரையிறங்குவதற்காக இரண்டாவது முறை விமான ஒடும் பாதையை நெருங்கியபோது கட்டுப்பாட்டு கோபுரம் விமானியுடனான தொடர்பை இழந்த்து. அந்த விமானத்தின் ஒரு இயந்திரம் செயல் இழந்ததாக விமானி தனது அவசர அழைப்பில் கூறியிருப்பதையும் உள்துறை அமைச்சர் இஜிஸ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!