Latestமலேசியா

பினாங்கில் கடலடி சுரங்கப் பாதை திட்டம் ; பேராசிரியர் ராமசாமி – ஷைரில் கீர் அலுவலங்களில் ( MACC ) எம்.ஏ.சி.சி அதிகாரிகள்

ஜோர்ஜ் டவுன். ஜூலை 3- 630 கோடி ரிங்கிட் செலவிலான சர்ச்சைக்குரிய பினாங்கு கடலுக்கடியிலான சுரங்கப் பாதை மற்றும் 3 சாலை நிர்மாணிப்பு திட்டம் தொடர்பில் அம்மாநிலத்தின் இரண்டு ஆட்சிக் குழு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று காலையில் அவர்களது அலுவலகத்திற்கு ஊழல் தடுப்பு ஆணையமான, (MACC)  எம்.ஏ.சி.சி அதிகாரிகள் சென்றனர்.
ஷைரில் கீர் ஜொஹாரி அலுவலகத்திற்குள் நான்கு அதிகாரிகள் நுழைந்தனர்.  இதர மூன்று அதிகாரிகள் இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். எனினும் ஷைரில் கீர் மற்றும் டாக்டர் ராமசாமி அப்போது அலுவலகத்தில் இல்லை. எம்.ஏ.சி.சி அதிகாரிகள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. ராமசாமியின் அலுவலகத்தில் சில ஆவணங்களை எம்.ஏ.சி.சி அதிகாரிகள் பரிசோதித்ததாக தெரிகிறது.
பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்போவதாக எம்.ஏ.சி.சி தெரிவித்திருந்ததாக முதலமைச்சர் சோவ் கோன் யோவ் புதன்கிழமையன்று கூறியிருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று பினாங்கு எம் .ஏ,சி,சி அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பினாங்கு துறைமுக வாரியத்தின் முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது அலுவலகத்திலும் எம்.ஏ.சி,சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் இந்த விவகாரத்தில் எம்.ஏ.சி.சி புதிய விசாரணை நடத்தும் என கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே எம்.ஏ.சி.சி அதிகாரிகள் தம்மிடம் எந்த விசாரணையையும் இன்று நடத்தவில்லை என பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு நடந்த எம்.ஏ.சி.சி விசாரணை போல் இது இல்லை என்றார் அவர். அவர்கள் என் அலுவலக ஊழியர்களிடம் மட்டும் பேசியதாகவும் எந்த கோப்பையும் எடுத்துச் செல்லவில்லை என்றும் அவர் கூறினார். ஷைரில் கீர்-ரும் அவ்வாறே தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!