Latestமலேசியா

பிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்

கோலாலம்பூர், ஜூலை 9 – சமீபத்தில் தனது சமையல் குறிப்பு மூலம் பிரபலம் அடைந்துவரும் சுகு பவித்திரா தம்பதியர் பிரதமர் மொஹிடின் யாசினை இன்று சந்தித்தனர்.

அவர்களைச் சந்தித்த போது, பிரதமர் ‘இன்று சமைக்கவில்லையா’ என வினவியுள்ளார். இக்கேள்வி தனது இருதய துடிப்பை அதிகமாக்கியதாக கூறுகிறார் 28 வயது சுகு பவித்திரா. அதே சமயத்தில் முதல் முறையாக பிரதமரை நேரில் சந்திப்பதால் நடுக்கமாக இருந்ததாகவும் பதற்றமடைந்துவிட்டதாகவும் கூறினார்.
பிரதமர் தான் உணவு உண்டு விட்டேனா என கேட்டபோது பதற்றத்தில் ஆமாம் என்றுமட்டும்தான் கூறமுடிந்தது என சுகு பவித்ரா தெரிவித்தார்.

ருக்குன் நெகாரா கோட்பாட்டின் இன்று 50ஆவது ஆண்டு நிறைவுநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் இன்று கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சுகு பவித்திரா தம்பதியரும் சென்றிருந்தனர்.
யூடியூப் அலைவரிசை மூலம் பிரபலம் அடைந்து வரும் சுகு பவித்ரா பிரதமரின் பாராட்டையும் பெற்றதோடு காமிராவிற்கான ட்ரைபோட், மைக்ரோவேவ் ஓவன், சோறு சமைக்கும் பானை மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!