Latestமலேசியா

பிரதமர் – துணைப்பிரதமர் பதவிக்கு ஷாபி அப்டால் – அன்வார் – முக்ரிஸ் : மகாதீரின் பரிந்துரையை PKR நிராகரித்தது

கோலாம்பூர், ஜூன் 30 – கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் கைப்பற்றினால் பிரதமர் வேட்பாளராக ஷாபி அப்துல் மற்றும் முதலாவது துணைப் பிரதமராக அன்வார் இப்ராஹிம், இரண்டாவது துணைப்பிரதமராக முக்ரிஸ் ஆகியோரை டாக்டர் மகாதீர் முன்மொழிந்திருப்பதை PKR நிராகரித்த்து.
பிரதமர் வேட்பாளராக அன்வார்தான் முன்மொழியப்பட வேண்டும் என்பதில் PKR திட்டவட்டமாக இருக்கிறது. அதே வேளையில் பிரதமர் வேட்பாளர் பதவிக்கான வேட்பாளர் விவகாரத்தில் டாக்டர் மகாதீரின் நிலையினால் பக்காத்தான் ஹராப்பான் ஆட்டம் காணவில்லையென PKR கருதுகிறது.
மகாதீரின் இந்த நடவடிக்கை அன்வாரை அவமானப்படுத்துவதாக உள்ளது. ஷாபி அப்டாலை பிரதமராக கொண்டுவரும் மகாதீரின் நேர்மையான உணர்வை இது பிரதிபலிக்கவில்லையெ PKR தலைவர்கள் கருதுகின்றனர். ஷாபி அப்டால் தலைமையேற்றிருக்கும் கட்சி பல இனங்களைக் கொண்டதாக இருக்கிறதே தவிர அது மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கவில்லையென PKR கட்சிக்கு நெருக்கமான தரப்பை மேற்கொள் காட்டி சீன நாழிதழ் தகவல் வெளியிட்டது.
பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றத்தில் இந்த பரிந்துரை கொண்டுவரப்பட்டால் இது குறித்து PKR விவாதிக்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற PKR மத்திய தலைமைத்துவ மன்ற கூட்டத்தில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஷாபி முன்மொழிய்ப்பட்ட விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக PKR விவாதிக்கவில்லை. எனினும் சுருக்கமாக இது குறித்து பேசப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களில் ஒருவர் கூட பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஷாபி அப்டாலை ஆதரிக்கவில்லை.
இந்த விவகாரத்தை PKR அதிகாரப் பூர்வமாக விவாதிக்கவில்லை. டி.ஏ,பியும் அமனா கட்சியும் இந்த விவகாரம் குறித்து பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்ற கூட்டத்தில் எழுப்பினால் இது குறித்து பி.கே.ஆர் பொருட்படுத்தாது. அன்வார்தான் பிரதமராக வரவேண்டும் என இதற்கு முன் நாங்கள் எடுத்துள்ள நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லையென PKR கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஜூலை 2ஆம் தேதி பக்காத்தான் ஹராப்பான் செயலகம் கூட்டத்தை நடத்தவிருக்கிறது. ஷாபி –அன்வார் – முக்ரிஸ் விவகாரம் தொடர்பில் உறுப்புக் கட்சிகள் கேள்வி எழுப்பினால் இது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!