Latestமலேசியா

பிரதமர் மொஹிடினை சந்திப்பதற்கு தயாராய் இல்லை

இந்தியர்களும் – சீனர்களும் பெரிக்காத்தான் நேசனலை ஆதரிக்கமாட்டார்கள் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், மார்ச் 12 பிரதமர் மொஹிடின் யாசினை சந்திப்பதற்கு இப்போதைக்கு தாம் தயாராய் இல்லையென முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். அதோடு இந்தியர்கள் மற்றும் சீனர்களில் பெரும்பாலோர் அடுத்த பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனலை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இப்போதைய அமைச்சரவை கிட்டத்தட்ட மலாய்க்காரர்களின் ஆக்கிரமிப்பை கொண்டதாக இருப்பதுவே இதற்கான காரணமாகும் என மகாதீர் சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தல் நடைபெறும்போது பெரிக்காத்தான் நேசனலுக்கு சீனர்கள் நிச்சயம் ஆதரிக்கமாட்டார்கள். அதே போன்று குறிப்பிட்ட சில இந்தியர்களிடமும் இந்த அனுகுமுறையை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்தார். எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்களின் பெரும்பான்மை வாக்குகள் குறையக்கூடும் என சீனார் ஹரியான் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் மகாதீர் தெரிவித்தார்.

29 அமைச்சர்கள் மற்றும 31 துணையமைச்சர்கள் என 70பேர் கொண்ட மொஹிடின் அமைச்சரவையில் ம.சீ.சவின் சார்பில் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் மற்றும் ம.இ.காவின் சார்பில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம், சரவணன் ஆகிய இருவர் மலாய்க்கார் அல்லாத அமைச்சர்களாக உள்ளனர்.

இதனிடையே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எதிர்நோக்கியுள்ள அம்னோ தலைவர்கள் விவகாரத்தில் மொஹிடினின் அனுகுமுறையை தாம் கவனிக்கவிருப்பதாகவும் மகாதீர் தெரிவித்தார். மொஹிடின் அமைச்சரவை பட்டியலில் பிரச்சனைக்குரிய தலைவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பார்ப்பதிலும் தாம் ஆர்வமாக இருப்பதாக மகாதீர் கூறினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!