Latestமலேசியா

பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் பக்காத்தான் ஹரப்பானில் கூட்டாக இணக்கம் காணப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூலை 1 – பிரதமர் வேட்பாளராக சபா வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டால் முன்மொழியப்பட்டுள்ளதற்கு பக்காத்தான் ஹரப்பான் உறுப்புக் கட்சிகளிடையே கூட்டாக இணக்கம் காணப்பட வேண்டும் என அமனா கட்சியின் வியூக இயக்குனர் காலிட் அப்துல் சமாட் தெரிவித்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற தேசிய தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஷாபி அப்டால் பரிந்துரைக்கப்பட்டதற்கு முதலில் பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளிடையே கருத்திணக்கம் காணப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

பக்காத்தான் ஹரப்பான் மீண்டும் அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவை பெறவேண்டிய அவசியம் இருப்பதையும் இந்த கூட்டம் உணர்ந்துள்ளதாகவும் காலிட் சமாட் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பொதுவான இணக்கம் காணப்பட வேண்டும். உறுப்புக் கட்சிகளின் கருத்துக்கள் கண்டறியப்பட்டு தெளிவான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார். இதனிடையே ஷாபி அப்டால் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழியப்பட்ட விவகாரத்தில் அமனாவின் நிலைப்பாடு குறித்து காலிட் சமாட் கருத்துரைக்கவில்லை.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!