Latestசினிமா

பிரபல பாலிவூட் நடிகர் இர்ஃபான் கான் இன்று மரணமடைந்தார்

இந்தியா, ஏப் 29 – இந்திய திரையுலகின் பாலிவூட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான இர்ஃபான் கான் இன்று காலமானார். 54 வயது எட்டிய அவருக்கு மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.  இந்நிலையில் நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமாக இருந்து வந்த நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார்.

1988ம் ஆண்டு சலாம் பாம்பே(Salaam Bombay)  என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின் பல படங்களில் நடித்தார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பாலிவூட் திரையுலகில் முத்திரை பதித்தார். ஹாலிவுட்டில் வெளியான ஜுராசிக் வேல்டு, லைப் ஆப் பை, அமேசிங் ஸ்பைடர் மேன் போன்ற பல ஹாலிவுட் படங்களிலும் இம்ரான் கான் நடித்துள்ளார்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ள இர்பான் கானின் மறைவு பாலிவுட் திரைப்பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வெளியே செல்ல முடியாத சூழலில் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!