Latestஉலகம்

பிரிட்டனில் கோவிட் -19 வைரஸிற்கு இந்திய இருதய மருத்துவ நிபுணர் பலி

லண்டன், ஏப் 8- பிரிட்டனில் கோவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஜிதேந்திரா குமார் ரத்தோட் பலியானார். 25 ஆண்டு காலம் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர் பணியாற்றி வந்துள்ளார்.

அவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கர்டிப் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்தியாவில் மருத்துவக் கல்வியை முடித்த அவர் 1990ஆம் ஆண்டு மத்தியில் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் இருதய அறு சிசிக்கை நிபுணராக இணைந்தார். அவரது மறைவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர்கள் தங்களது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டனர்.

அவர் நோயாளிகளிடம் கருணை கொண்டவர் மட்டுமின்றி மருத்துவ பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வந்தார் என சக மருதுவர்கள் புகழாரம் சூட்டினர். அவரது மரணம் மருத்துவத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என கார்டிப் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக சுகாதார வாரியத்தின் தலைமை நிர்வாகி லென் ரிச்சர்ட்ஸ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!