Latestஉலகம்

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உடல் நிலையில் முன்னேற்றம்

லண்டண், ஏப் 9 – கோவிட்-19 வைரஸ் தொற்று மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரிட்டிஸ் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 938 பேர் மரணம் அடைந்தனர். இந்த உயிர்க்கொல்லியினால் பிரிட்டனில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,097ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 55,000த்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் 14 ஊழியர்களும் மரணம் அடைந்தனர். இவர்களில் 9 பஸ் ஓட்டுனர்களும் அடங்குவர்.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் லண்டனில் மேலும் 17 நடமாடும் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறினர். அதோடு இரண்டு பேருக்கு மேல் மக்கள் கூடக்கூடாது என பிரிட்டனில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது .

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!