Latestமலேசியா

பி.கே.ஆர் கட்சியிலிருந்து மேலும் ஒரு எம்.பி விலகலாம்

கோலாலம்பூர், மே 23 – பி.கே.ஆர் கட்சியிலிருந்து மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் விலகக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளன. கூட்டரசு அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முயற்சிக்கு இது மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்தது முதல் சம்பந்தப்பட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் வெளிநடமாட்டம் குறைவாக இருப்பதாக கட்சி தகவல்கள் கூறுகின்றன. பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் அஸ்மின் அலிக்கு ஆதரவான தரப்பை சேர்ந்தவரான அந்த எம்.பி கட்சி தாவும் முடிவை இன்று அறிவிக்கக்கூடும் என தெரிகிறது.
பி.கே.ஆர் கட்சியிலிருந்து மேலும் சில எம்,பிக்கள் வெளியேறி சுயேச்சைகளாக செயல்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது,
அம்னோ, பாஸ் மற்றும் சரவாக்கின் ஜி.பி.எஸ் கூட்டணி எம்.பிக்களுடன் சேர்ந்து மொஹிடின் யாசின் பெரிக்காத்தான நேசனல் அரசாங்கத்தை அமைப்பதற்கு அஸ்மின் அலியும் அவரது ஆதரவைக் கொண்ட சில எம்.பிக்களும் பி.கே.ஆரிலிருந்து வெளியேறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!