Latestமலேசியா

பீர் தொழிற்சாலைக்கு  விலக்களிக்கப்பட்டதை அரசாங்கம் மீட்டுக்கொண்டது

கோலாலம்பூர்,  ஏப் 6- நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலக் கட்டத்தில்  Heineken  தொழிற்சாலையில் பீர் தயாரிப்பதற்கு  விலக்களிக்கப்பட்ட  சர்ச்சைக்குரிய அனுமதியை அரசாங்கம் மீட்டுக்கொண்டது .

அனைத்துலக வாணிக தொழில்துறை அமைச்சரின் அனுமதியின்றி  உள்நாட்டு  வாணிக   மற்றும் பயனீட்டாளர்  விவகார அமைச்சின்  தலைமைச் செயலாளர்  பீர் தொழிற்சாலை செயல்படுவதற்கு அனுமதிக்கும் முடிவுக்கான கடிதத்தை வழங்கியதாக  கூறப்பட்டது.

இன்று காலை அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றதாகவும்   அக்கூட்டத்தில்   உள்நாட்டு  வாணிக பயனீட்டாளர்  விவகார அமைச்சர்  ALEXANDER NANTA LINGGI   கலந்துகொள்ளவில்லை.

இதுபோன்ற அனுமதி  மற்றொரு  மிகப்பெரிய பீர்  தயாரிக்கும்  தொழிற்சலைக்கும்  வழங்கப்பட்டிருப்பதாக உள்ளூர் நாழிதழ் செய்தி வெளியிட்டது.

Heineken நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விலக்களிப்பு  அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான  முகமட் அஸ்மின் அலி தலைமையிலான அனைத்துலக வாணிக தொழில்துறை அமைச்சின்  அனுமதியும்  பெற்றதாக  தெரியவருகிறது.

நுட்ப அடிப்படையில் Heineken   பீர் நிறுவனம்  உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கும் பிரிவின் கீழ் உள்ளது.  ஆனால் நடமாட்ட  கட்டுப்பாட்டு உத்தரவின் நடப்புக்  காலத்தில் விலக்களிப்படும் அத்தியாவசிய துறையின் கீழ் அது இல்லை. இதற்கு  அனைத்துலக வாணிக தொழில்துறை அமைச்சின் அனுமதி தேவையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!