Latestமலேசியா

புதிதாக  68 பேருக்கு கோவிட் தொற்று; மரணம் பதிவாகவில்லை

கோலாலம்பூர், மே 8 – நாட்டில் இன்று 68 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக தொற்றுக்கு உள்ளானவரிகளில் 57 பேர் வெளிநாட்டினர் என சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர்  டாக்டர் நோர் ஹிஷாம்  அப்துல்லா  தெரிவித்தார்.

பிரிட்டனிலிருந்து திரும்பிய மூவர் மற்றும் அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஒருவரும்  புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  தற்போது  1,564 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் 88 பேர் இன்று முழுமையாக குணமடைந்து இல்லம் திரும்பினர்.

சிசிக்சைக்குப் பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,864.  இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக நாட்டில் கோவிட் தொற்று தொடர்பான மரண சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.   அதோடு இந்த தொற்றினால் தீவிர சிகிச்சை பிரிவில் சிசிச்சைக்கு   அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 18 பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில்  எழுவர் மட்டுமே  செய்ற்கை சுவாச கருவியின்   உதவியோடு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெகிரி செம்பிலான் பெடாசில் தொழிற்சாலை ஒன்று நோய் தொற்றுக்குள்ளான மையமாக அடையாளம் காணப்பட்டது.  அந்த தொழிற்சாலையைச் சேர்ந்தவர்களில்   60 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றகுள்ளான 60 பேரில்  எழுவர் மட்டுமே மலேசியர்களாவர். .

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!