Latestமலேசியா

புதியு SOPயின் கீழ் பாலர் பள்ளி வகுப்புகளில் பெற்றோர்கள் நுழைவதற்கு அனுமதியில்லை

கோலாலம்பூர், ஜூன் 20 – ஜூலை 1ஆம் தேதி பாலர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவிருப்பதை தொடர்ந்து SOP எனப்படும் நிர்ணயிக்கபட்ட சீரான விதிமுறைகள் வரையப்பட்டுள்ளன. பாலர் பள்ளியின் வகுப்பறைகள் சமுக இடைவெளியை கவனத்தில் கொண்டு மிகவும் கவனமான முறையில் உருவாக்கப்ப்பட்டுள்ளன. வகுப்பறைகளின் கொள்ளளவை பொறுத்தே பாலர் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இருக்கும் .
சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நடைமுறைக்கு ஏற்ப மேசைகள் போடப்பட்டிருக்கும். ஆசிரியர்கள் மற்றும் கற்கும் நடவடிக்கைகைளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும். பெற்றோர்களும் அவர்களது பராமரிப்பாளர்களும் தங்களது பிள்ளைகளை பள்ளியின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார்படுத்துவதற்கு தயாராக வேண்டும் என இந்த எஸ்,ஒ.பியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிள்ளைகளை அழைத்துவரும் பெற்றோர்கள் வகுப்பறைகளின் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்ப பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாலர் பள்ளிக்கு அழைத்து வரவேண்டும். மற்றும் அங்கிருந்து அவர்களை வீட்டிற்கு கொண்டுச் செல்ல வேண்டும். பெற்றோர்கள் முன்னிலையிலேயே பாலர் பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் உடல் வெப்ப அளவை பரிசோதிக்க வேண்டும் என்பது உட்பட பல முக்கிய எஸ்,ஒ,பிக்கள் வரையப்பட்டுள்ளன. .
பாலர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் உதவியாளர்களும் முக கவசங்களை அணிந்திருக்க வேண்டும். கல்வி நடவடிக்கைக்கு முன்னதாகவும் அதற்கு பின்னரும் சவக்காரம் அல்லது கிருமி நாசினியைக்கொண்டு கை கழுவவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்ட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!