Latestமலேசியா

புதிய கட்சி அமைப்பதில் தொடர்பா? ஹிசாமுடின் மறுப்பு

கோலாலம்பூர், ஜூன் 29 – புதிய அரசியல் கட்சி அமைப்பதில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக அல்லது தமக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரான ஹிசாமுடின் உசேய்ன் மறுத்துள்ளார். பார்ட்டி ரிபோர்மாசி பெர்சத்து நெகாரா எனப்படும் அந்த புதிய அரசியல் கட்சி அமைக்கப்பட்டதில் ஹிசாமுடினுக்கு தொடர்பு இருப்பதாக அண்மையில் சமுக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில் தாம் இன்னமும் அம்னோவுக்கு விசுவாசமாக இருப்பதாக ஹிசாமுடின் தெரிவித்தார். அம்னோ மற்றும் தேசிய முன்னணியிலிருந்து வெளியேறப் போவதாக வெளியாகும் தகவல் தமக்கு ஒன்றும் புதிது அல்ல. PKR கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் அஸ்மின் அலியுடன் இணைந்து தாம் புதிய கட்சி அமைக்கப்போவதாக வெளியான தகவலையும் அவர் சுட்டிக்காட்டினார். முழுக்க முழுக்க அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற தகவல்கள் வெளியாகி வருவதாக அவர் சொன்னார்.
தீய உள்நோக்கத்தோடு பரப்பப்படும் இதுபோன்ற தகவல்களுக்கு தாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் ஹிசாமுடின் கூறினார். பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தில் பிரச்சனைகள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக புதிய கட்சி அமைப்பு விவகாரம் பூதகரமாக்கப்படுவதாக அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!