Latestமலேசியா

பூப்பெய்தல் நன்னீராட்டு விழா ரத்து; கவலையில் சிறுமி தற்கொலை

புக்கிட் மெர்தாஜாம், ஜூலை 9 – சிங்கப்பூரில் சிக்கிக் கொண்ட தாயார் வரமுடியாத காரணத்தினால் தனது பூப்பெய்தல் நன்னீராட்டு விழா ரத்து செய்யப்பட்டைத் தொடர்ந்து கவலையில் 15 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று பிற்பகல் மணியளவில்புக்கிட் மெர்தாஜாம் பங்சாபூரி பெராய் இண்டா, அடுக்குமாடியின் 11-ஆவது மாடியிலிருந்து அச்சிறுமி தற்கொலை செய்துக் கொண்டதாக செபராங் பெராய் மாவட்ட போலீஸ் தலைவர் தெரிவித்தார். வீட்டின் முன் புற கதவு வழியாக தனது அக்கா தற்கொலை செய்துக் கொண்டதை தங்கை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

குடும்பத்தில் மூத்த பிள்ளையான அச்சிறுமி எளிதில் மனமுடைந்து போகும் சுபாவம் கொண்ட பெண் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என அவர் தெரிவித்தார். தனது பூப்பெய்தல் நீராட்டு விழாவிற்கு தனது தாய் வரமுடியாமல் போக, அவ்விழா தடைபட்டு போன கவலையில் அச்சிறுமி அவ்வாறு செய்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். தற்போது அச்சிறுமி மற்றும் அவரது உடன்பிறப்புகளும் தாயாரின் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். அவர்களின் தந்தை அருகிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் வேலை செய்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அச்சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!