Latestமலேசியா

பெட்டாலிங் ஜெயா (P. J Old Town) பழைய மார்க்கெட்டில் EMCO அமல்படுத்தப்பட்டது

கோலாலம்பூர் , மே 10 – கோவிட்  -19 தோற்று பரவியதை தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா, ஜாலான் ஒத்மான் பழைய மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள வர்த்தக பகுதிகள் EMCO எனப்படும் வலுப்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று வரை அந்தப் பகுதியில் 26 பேருக்கு கோவிட் -19 தோற்று பரவியதால் சுகாதார அமைச்சின் ஆலோசனையை தொடர்ந்து அங்கு  EMCO  அமல்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்ததாக தற்காப்பு துறைக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

இன்று மே 10 ஆம் தேதி  முதல் மே 23 ஆம் தேதி வரை அங்கு  EMCO அமலில் இருந்துவரும். A.B.C என மூன்று பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் வலுப்படுத்தப்பட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது என  இஸ்மாயில் சப்ரி கூறினார்.

EMCO வின் கீழ் அனைத்து குடியிருப்பு வாசிகளும்   அப்பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்க படுகின்றனர்.

அங்கு வர்த்தக நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  EMCO  மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மருத்துவ முகாம் ஒன்றும் அமைக்கப்படும் .

EMCO  வின் சுமுகமான அமலாக்கத்தை உறுதிப்படுத்ற்கு அனைத்து மக்களும் பொறுமை காக்க வேண்டும் என்பதோடு சுகாதார அமைச்சின்  மருத்துவர் அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதோடு அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றும்படி இஸ்மாயில் சப்ரி கேட்டுக்கொண்டார்.

பெட்டாலிங் ஜெயா பழைய மார்க்கெட்டில் கடல் உணவு விற்பனைப் பிரிவில் உள்ள 51 வயதுடைய வர்த்தகர் ஒருவருக்கு கோவிட் – 19 தோற்று இருந்ததை தொடர்ந்து ஏப்ரல் 27ஆம் தேதியன்று அந்த மார்க்கெட் இதற்கு முன் மூடப்பட்டது .அதோடு ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் பதினெட்டாம் தேதி வரை அந்த மார்க்கெட்டிற்கு சென்று

கடல் உணவு கடல் உணவு வாங்கியோர் பரிசோதனைக்கு செல்லும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!