Latestமலேசியா

பெர்சத்து கட்சிக்கு அம்னோ ஆதரவு தரக்கூடாது; தெங்கு ரசாலி வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 3 – நாட்டில் திடீர் தேர்தல் நடந்தால் பிரதமர் முஹிடின் யாசினின் பெர்சத்து கட்சிக்கு அம்னோ ஆதரவு தரக்கூடாது எனக் கூறுகிறார் முன்னாள் நிதியமைச்சரும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான தெங்கு ரசாலி ஹம்சா. அம்னோ அடுத்த அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய கட்சியாக இருக்க வேண்டும். பெர்சத்து கட்சியோடு இணைந்து போட்டியிட்டால் அம்னோவின் ஆதிக்கம் குறையும். தொகுதி பிரிப்பதிலும் சிக்கல் ஏற்படும். தேர்தல் முடிந்தப் பிறகு இப்போது போல் மீண்டும் அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல் ஏற்படலாம். ஆகையால் அம்னோ பாஸ், மசீச, மஇகா ஆகியவற்றோடு மட்டும் கூட்டணி வைத்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
அம்னோவின் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என செய்தியாளர் வினவியபோது, தற்போது உள்ள தலைவர்கள் நாணயமான நம்பகத்தன்மை கொண்ட புதிய தலைவர்களுக்கு வழி விட்டு ஒதுங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அண்மையக் காலமாக அம்னோவைச் சேர்ந்த சில தலைவர்கள் வெளிப்படையாகவே பெர்சத்து கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!