Latestமலேசியா

பெர்சத்து கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தால் போதும் – நூர் ஜஸ்லான்

கோலாலம்பூர், ஜூலை 1 – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சிக்கு 15 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மேல் கொடுக்கக்கூடாது என ஜோகூர் அம்னோ தலைவர்களில் ஒருவரான நூர் ஜஸ்லான் கூறியுள்ளார்.பெர்சத்து கட்சி சுமார் 50 தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது. அந்த கட்சிக்கு அடிமட்ட தொண்டர்கள் இல்லை என்பதால் 50 இடங்கள் கொடுக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் அம்னோ உறுதியாக இருக்க வேண்டும் என முன்ளாள் உள்துறை துணையமைச்சருமான நூர் ஜஸ்லான் தெரிவித்தார்.
அம்னோவின் ஆதரவு இல்லாவிட்டால் அந்த கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது. கடந்த பிப்ரவரி மாத்த்தில்கூட அம்னோவின் துணையோடுத்தான் முஹிடின் யாசின் தரப்பிலான பெர்சத்து கட்சி பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை கவிழ்த்தது. அம்னோ ஆதரித்ததால் முஹிடின் பிரதமராக வரமுடிந்தது. எனவே தொகுதி பங்கீடு விவகாரத்தை அம்னோ மிகவும் கவனமாக கையாள வேண்டும் என நூர் ஜஸ்லான் கூறினார்.
கட்சியின் நலன் கருதி முஹிடினும் டாக்டர் மகாதீரும் சமரசம் செய்து கொள்ள வேண்டும். பெரிக்காத்தான் நேசனல் வெற்றி பெற்றால் முஹிடின் பிரதமராக வரலாம். அதே வேளையில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால் டாக்டர் மகாதீர் பிரதமராக வரலாம் என கடந்த பொதுத் தேர்தலில் பூலாவ் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி கண்டவருமான நூர் ஜஸ்லான் கூறினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!