Latestமலேசியா

பெஸ்தாரி ஜெயாவில் கட்டுபாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் இந்திய ஆடவர் மரணம்

பெஸ்தாரி ஜெயா, ஜூன் 29 – நேற்றிரவு கம்போங் பெச்சா பத்து (Kampung Pecah Batu), ஜாலான் ரவாங் அருகே கட்டுபாட்டை இழந்த கார் மரம் ஒன்றை மோதிய விபத்தில் இந்திய ஆடவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அந்த விபத்தில் கார் ஓட்டுனரான 18 வயது லோகின்பீரன் சம்பவம் நிக்ழந்த இடத்திலேயே மரணமடைந்த வேளை உடன் பயணித்த 18 வயது ரயன் என்பவர் கடும் காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 10.40 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அங்கு விரைந்த மீட்புப் படையினர் Nissan Almeera ரக கார் மரத்தில் போதிடயிருந்தது. உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் தலைவர் Azrel Izaidi Ahamad தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!