Latestமலேசியா

பேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா? – டாக்டர் மகாதீர் ஆதங்கம்

கோலாலம்பூர் மார்ச் 1 – பிரதமராக வருவதற்கு தமக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை காட்டுவதற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் தன்னை சந்திக்க அனுமதிக்கவில்லை என டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

மேலும் பெர்சத்து கட்சியின் தலைவரான மொஹிடின் யாசின் அரசாங்கம் அமைப்பதற்கு பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தலில் தோல்வி கண்டவர்களை அரசாங்கம் அமைப்பதற்கு அழைத்திருப்பது என்ன நியாயம் என்ற ஆதங்கத்தையும் டாக்டர் மகாதீர் இன்று காலையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறாதவர் இன்று காலையில் பிரதமராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறார். தோல்வி அடைந்தவர்கள் அரசாங்கம் அமைத்திருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள். இது வேடிக்கையாக இருப்பதாக மகாதீர கூறினார்.
222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 114 பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருந்தும் தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது எந்த வகையில் நியாயம் என டாக்டர் மஹாதீர் கேள்வி எழுப்பினார்.
அஸ்மின் அலியைவிட பமொஹிடின் ஏற்படுத்திய காயம் தமக்கு அதிகமானது என்றும் அவர் தெரிவித்தார்.

அம்னோவில் இருந்து விலக்கப்பட்டவுடன் பெயர்த்து கட்சியின் தலைவர் பதவிக்கு மொஹிடினை நியமித்தேன்.
ஆனால் அவர் எனக்கு செய்திருக்கும் துரோகம் அதிகமானது என டாக்டர் மகாதீர் வேதனையோடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அஸ்மினுக்கு ஒரு திட்டம் இருந்தது. அதை விட திட்டமிட்டு எனக்கு எதிரான துரோகம் செய்து அதில் மொஹிடின் வெற்றி பெற்றிருக்கிறார் என அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!