Latestமலேசியா

பொதுபோக்குவரத்து சேவை காலை 6 – 10 மணி & மாலை 5 – 10 மணி வரையில் மட்டுமே செயல்படும்

கோலாலம்பூர், மார்ச் 23 – நாளை முதல் பொதுப்போக்குவரத்துச் சேவைகள் காலை 6 – 10 மணி மற்றும் மாலை 5 – 10 மணி வரையில் மட்டுமே செயல்படும் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாய்ல் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

போலிஸ், ஆயுதப் படை, ரேலா மற்றும் இதர சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பொதுப்போக்குவரத்துகளில் “Social Distance” எனப்படும் 1 மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மிகச் சிரமம். எனவே பயணிகளிடையே கோவிட் -19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும் பயணிகளுக்கிடையே தொடர்புகளை குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
எனினும் டாக்சிகள் மற்றும் இணைய வசதியின் மூலம் பயண சேவைகளை வழங்கும் வாகனங்கள் இந்த விதிமுறையில் உட்படுத்தப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
பொதுப்போக்குவரத்து ஓட்டுனர்கள் முகக்கசவத்தை அணிந்திருக்க வேண்டும் என்பதோடு தங்களுக்கும் பயணிகளுக்குமிடையே ஒரு மீட்டர் இடைவெளி தூரத்தை நிலைநாட்ட வேண்டும் என இஸ்மாயில் சப்ரி கேட்டுக்கொண்டார்.

மேலும் பெட்ரோல் நிலையங்களை நடத்துவோர் மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டிகள் பயன்படுத்துவதற்காக நாசிக்கிருமிகளை கட்டாயம் தயார்படுத்தி வைக்க என்றும் பணிக்கப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!