Latestமலேசியா

பொதுப்பல்கலைகழகங்களின் 2ஆம் செமஸ்டர் தங்கும் விடுதிகளுக்கு 15 விழுக்காடு கட்டணக் குறைப்பு

புத்ரா ஜெயா, ஜூலை.15 – அரசு பல்கலைகழகங்களில் 2019/2020 ஆண்டின் இரண்டாம் செமஸ்டரை தொடங்க உள்ள மாணவர்களுக்கான தவணைக்கான சேவை மற்றும் தங்கும் விடுதிக்கான கட்டணம் 15 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் நூரைய்னி அகமாட் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு மொத்தம் 7 கோடி 20 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2 கோடி ரிங்கிட், நிதி அமைச்சின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதர 5 கோடி 20 லட்சம் ரிங்கிட் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுகீட்டின் மூலம் அந்த நிதி வழங்கப்படும் என அவர் விவரித்தார்.

கோவிட்-19 தொற்றினால் மாணவர்களின் பெற்றோர்கள் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்ட நிலையில் இத்திட்டத்தின் மூலம் நாடுதழுவிய அளவில் 523,318 மாணவர்கள் பயனடைவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். இன்று நடைப்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் மாணவர்களின் செமஸ்டர் கல்வி தொகை குறித்து கேள்வி எழுப்பட்ட போது நூரைய்னி அகமாட் இதனை தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் அக்டோபர் மாதம் உயர்கல்வி கூடங்கள் நிர்ணயிக்கபட்ட சீரான விதிமுறைகளுடன் செயல்படவுள்ளன.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!