Latestமலேசியா

போதைப் பொருள் வினியோகம் மருத்துவரும் மருந்தியல் பெண் அதிகாரியும் கைது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 1- பெட்டாலிங் ஜெயாவில் கடந்த மூன்று மாத காலமாக போதைப் பொருள் வினியோகம் செய்து வந்ததாக நம்பப்படும் ஆண் மருத்துவரையும் மருந்தியல்துறையில் பணியாற்றிவரும் பெண் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டனர். கிளானா ஜெயாவில் ஜாலான் பி.ஜே.யுவில் ஹோன்டா சிவிக் காரில் ஏற முயன்றபோது 28 வயதுடைய மருத்துவரும் 26 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் நிக் இஷானி முகமட் பைசால் ( Nik Ezanee Mohd Faisal ) தெரிவித்தார்.

அந்த காரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 70 கிரேம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு அந்த ஆடவர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது என நிக் இஷானி கூறினார். இந்த இருவரும் கடந்த மூன்று மாத காலமாக பெட்டாலிங் ஜெயாவில் போதைப் பொருள் வினியோகித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. அந்த இருவரும் 1952ஆம் ஆண்டு அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஆடவருக்கு சொந்தமான காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!