Latestசினிமா

“போபி” திரைப்பட புகழ் நடிகர் ரிஷி கபூர் புற்றுநோயால் மரணம்

மும்பை, ஏப் 30 – போபி திரைப்படம் மூலம் உலகளாவிய நிலையில் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த போலிவூட் நடிகர் ரிஷி கபூர் தனது 67வது வயதில் நேற்று காலமானார். எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து நேற்றிரவு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரஆணமடைந்தார்.

2018ஆம் ஆண்டு ரிஷி கபூருக்கு இந்த புற்றுநோய் கண்டறியப்பட்ட உடனே, நியுயோர்க்கில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த காலக்கட்டத்தின் போது போலிவூட் திரைப்பட பிரபலங்களான ஷா ரூக் கான், கரன் ஜோஹார், பிரியங்கா சோப்ரா என பலர் அவரை நியுயோர்க் சென்று நலம் விசாரித்தனர்.

ரிஷி கபூரின் மரணம் குறித்து, அவருடைய நெருங்கிய நண்பரான நடிகர் அமிதாப் பச்சன், தனது சோகத்தை டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
1952 ஆம் ஆண்டு ராஜ் கபூர் மற்றும் கிறிஷ்ணா கபூர் ஆகியோருக்கு பிறந்த ரிஷி கபூர், பின்னர் முன்னாள் நடிகையான நீத்து கபூரை மணமுடித்தார். அவரின் மகன்தான் தற்போது போலிவூட் நடிகரான ரன்பீர் கபூர்.
இவரின் மரணம், திரைப்பட உலகிற்கு பெரும் இழப்பாகும் என திரைப்பட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  அன்றைய காலத்தில் ரிஷி கபூருக்கு மலேசியாவில் பல ரசிகர்கள் குறிப்பாக மலாய் பெண்கள் மத்தியில் பல ரசிகைகள் இருந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!