Latestமலேசியா

“போலி போக்குவரத்து போலீசாரால்” ரிம387,000 ஏமாந்த ஆசிரியர்

ஜொகூர் பாரு, ஏப் 10 – போக்குவரத்து போலிஸ் என கூறி ஆசிரியர் ஒருவரை ரிம387,000 ஏமாற்றியுள்ளது மோசடி கும்பல் ஒன்று.

38 வயதான அந்த ஆரம்பப் பள்ளி பெண் ஆசிரியருக்கு கடந்த பிப்ரவரி 4ஆம் திகதி தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் அந்த ஆசிரியர் வாகனத்தை இடித்து விட்டு ஓடிவிட்ட வழக்கு ஒன்றில் அவர் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் அவரின் வங்கியில் உள்ள பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய புதிதாக வங்கி கணக்கு ஒன்றை திறக்கும்படியும் அதில் அவர்கள் வழங்கும் தொலைப்பேசி எண்ணை பதிவு செய்யும்படியும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் இதுகுறித்து குடும்ப உறுப்பினர்கள் நண்பர்களிடமும் தெரிவிக்க கூடாது என்றும் தொலைப்பேசி உரையாடல் வங்கி சம்பந்தப்பட்ட ரசீது ஆகியவற்றை அழித்துவிடும்படியும் உத்தவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதிய வங்கி கணக்கில் அவரது பணம் அனைத்தையும் போட உத்தரவு வழங்கப்பட்டிருந்த அந்த ஆசிரியரின் பணம் அனைத்தையும் பதியப்பட்ட அவர்களின் தொலைப்பேசி எண் மூலம் கொள்ளையடித்துள்ளது அக்கும்பல்.

தன்னுடைய சேமிப்பு மற்றும் கடன் வாங்கப்பட்ட பணம் அனைத்தும் வங்கியிலிருந்து காணாமல் போனதைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் போலிசிடம் புகார் வழங்கியுள்ளார் என ஜொகூர் போலிஸ் படைத் தலைவர் ஆயுப் கான் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!