Latestமலேசியா

போலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு

கோலாலம்பூர், ஜூலை 10 – ஜாலான் மாயாங்கில் உள்ள மாயாங் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  சந்தேகிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த ஆடவனை பிடிக்க முயன்ற போது போலீசுக்கும் சந்தேக பேர்வழிக்கும் இடையே துப்பாகிச் சூடு நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு 11.30 மணியளவில் கருப்பு நிற Audi  காரில் சென்ற  சந்தேக நபரை  ரோந்து காரைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் துரத்திச் சென்றனர். அப்போது அந்த சந்தேகப் பேர்வழி போலீஸ் ரோந்து காரை மோதியதில் அக்காரின் வலது பக்க கதவு நசுங்கியது. அதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே, துப்பாகிச் சூடு நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதன் பின், மற்றொரு போலீஸ் ரோந்து காரில் அந்த ஆடவனை கம்போங் பண்டான் வரை துரத்திச் சென்றும் அந்த ஆடவன் தப்பிச் சென்று விட்டதாக போலீசார் கூறினார். இதனிடையே, அந்த ஆடவனை கையும் களவுமாக பிடிக்க போலீசாரின் தேடும் வேட்டை தொடர்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!