Latestமலேசியா

மகாதீர் அதிகாரத்தில் இல்லாதது அன்வாருக்கு இனி நல்ல காலம் – அன்வார் ஆதரவாளர்கள் கருத்து

கோலாலம்பூர், மார்ச் 2 – மகாதீர் அதிகாரத்தில் இல்லாதது அன்வாருக்கு நல்ல காலத்தை கொண்டுவருமென அவரது OTAI சீரமைப்பு அமைப்பின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். ஒரு வார கால அரசியல் நெருக்கடி ஒரு முடிவுக்கு வந்தது குறித்து திருப்தி அடைவதாக அந்த அமைப்பின் பேச்சாளரான அப்துல் ரசாக் கூறினார்.

மேலும் அஸ்மின் அலி மற்றும் சுராய்டா கமாருடின் பி.கே.ஆர் கட்சியிலிருந்து வெளியேறியது குறித்தும் OTAI சீரமைப்பு அமைப்பினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எங்களது இலக்கு நிறைவேறிவிட்டது. முதலில் மகாதீர் தர்மசங்கடத்தோடு வெளியேறியுள்ளார். இரண்டாவது கட்சியிலிருந்து அஸ்மின் சுரைடா நீக்கப்பட்டனர்.
அதே வேளையில் கொல்லைப்புற வழியில் அதிகாரத்தை கைப்பற்றியவர்களை தங்களது தரப்பு தொடர்ந்து எதிர்ப்பதாக ரசாக் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!