Latestஉலகம்

மக்கள் செயல் கட்சியின் கொள்கை அறிக்கையை சிங்கப்பூர் பிரதமர் வெளியிட்டார்

சிங்கப்பூர். ஜூன் 27 – அதிகமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவது, பொருளாதாரத்தை துரிதப்படுத்துவது, வெளிநாட்டு தொழிலாளர்களின் சமுக நலன் மற்றும் கோவிட் 19 தொற்று பரவலினால் மக்களின் பாதுகாப்புக்கு ஆதரவான திட்டங்களைக் கொண்ட கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சி தனது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டது.

நமது வாழ்க்கை, நமது வேலைகள் மற்றும் நமது எதிர்காலம் என்ற தலைப்பில் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரதமர் லீ ஹிசியன் லூங் அந்த கொள்கை அறிக்கையை இன்று வெளியிட்டார்.

பொதுவாகவே வழக்கமாக தேர்தலின்போது மக்கள் செயல் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை சிங்கப்பூருக்கான நீண்ட கால திட்டங்களை கொண்டிருக்கும். ஆனால் இப்போதைய கோவிட் தொற்று காலத்தில் இந்த நெருக்கடியை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதை வலியுறுத்தும் வகையில் தேர்தல் கொள்கை அறிக்கை இருக்கும் என லீ ஹிசியன் லூங் தெரிவித்தார்.

கோவிட் தொற்றின் காரணமாக தேர்தல் கொள்கை அறிக்கை முகநூல் நேரலை மூலமாக வெளியிடப்பட்டது. மக்களின் உயிர்களையும் சிங்கப்பூரியர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பொறுப்பையும் கடப்பாட்டையும் அரசாங்கம் கொண்டிருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.

நாடாளுமன்றத்தின் 93 இடங்களுக்காக ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் சிங்கப்பூர் தேர்தலில் 27 புதுமுகங்களையும் மக்கள் செயல் கட்சி அறிமுகப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!