Latestமலேசியா

மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு அபராதத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

கோலாலம்பூர், ஜூலை 15- போதைப் பொருள் மற்றும் மதுபோதையுடன் வாகனங்கள் ஓட்டுவோர் கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41ஆவது விதிகள் முதல் 45ஆவது விதிவரை திருத்தங்கள் செய்வதற்கு கொள்கை அளவில் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சட்டத்துறை தலைவர் அலுவலகம் உத்தேச மசோதாவின் நகலை ஆராய்ந்து வருவதாகவும் ஜூலை 17ஆம் தேதி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.

44ஆவது விதியின் கீழ் தற்போது 10 ஆண்டுகள்வரை கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த திருத்தத்திற்கு பின் முதல் முறையாக குற்றம் புரிபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறையும் அதன் பிறகு அடுத்தடுத்து குற்றம் புரிபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். தற்போது குற்றம் புரிந்தவர்களுக்கு கூடிய பட்சமாக 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்த தொகை முதல் முறையாக குற்றம் புரிந்தால் 100,000 ரிங்கிட்டாகவும் அடுத்தடுத்து குற்றம் புரிந்தால் 150,000 ரிங்கிட்டாகவும் அதிகரிக்கப்படுவதாக வீ கா சியோங் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!