Latestமலேசியா

மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் டாக்டர் மகாதீருக்கு மொஹிடின் கடிதம்

கோலாலம்பூர், மார்ச் 11 – மனதை காயப்படுத்தியிருந்தால் அதனை மறந்து மன்னிக்கும்படி டாக்டர் மகாதீருக்கு கடிதம் எழுதியிருப்பதாக பிரதமர் மொஹிடின் யாசின் கூறியுள்ளார். புதிய அரசாங்கம் அடுத்த பொதுத்தேரதல் வரை நீடிக்கும் என டாக்டர் மகாதீர் வெளியிட்டிருக்கும் அறிக்கையையும் மொஹிடின் வரவேற்றார்.

நாங்கள் அரசாங்கத்தை அமைத்துள்ளோம். இந்த அரசாங்கத்தை டாக்டர் மகாதீர் அங்கீகரிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக அவர் சொன்னார். இந்த அரசாங்கம் சட்டப்பூர்வமானது மற்றும் அரசியலமைப்பு சட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர். இன்று தமது முதலாவது அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமையேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியபோது மொஹிடின் இதனை தெரிவித்தார். டாக்டர் மகாதீருடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என் கேட்கப்பட்டபோது பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.

நாட்டின் நலனுக்காக எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் மகாதீரை சந்திப்பதற்கு தயாராய் இருப்பதாகவும் மொஹிடின் கூறினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!