Latestமலேசியா

மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்ட 7இந்திய பிரஜைகள் உட்பட 28 பேர் கண்டுப் பிடிக்கப்பட்டனர்

அலோஸ்டார், ஜூன் 25- மனிதக் கடத்தல் கும்பலினால் பாதிக்கப்பட்ட ஆவணங்கள் எதுவுமற்ற 28 வெளிநாட்டு குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். கூலிமிற்கு அருகே பாடாங் செராயில் தாமான் MBI Desaku விலுள்ள ஒரு வீட்டில் இருந்த அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
விடியற்காலை 2,30 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அந்த வீட்டில் போலீஸ் முற்றுகையிட்டதாக கெடா குற்றவியல் விசாரணைத்துறையின் தலைவர் SAC ஷாபி அகமட் Sapii Ahmad தெரிவித்தார்.
கைது செய்ய்ப்பட்ட 28ஆடவர்களில் 7 பாகிஸ்தானியர்கள் 8 இந்தியர்கள், 13 வங்காளதேசிகள் ஆகியோரும் அடங்குவர். . 21 மற்றும் 44 வயதுடைய இவர்கள் அனைவரும் எந்தவொரு பயண ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை. கோலாலம்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட இவர்கள் அனைவரும் மற்றொரு இடத்திற்கு கொண்டுச் செல்லப்படுவதற்காக அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர். கொத்தடிமை தொழிலாளர்களாக பணியாற்றுவதற்காக ஆள்கடத்தல் நடவடிக்கை மூலம் அவர்கள் இங்கு கொண்டுவரப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் ஷாபி அகமட் தெரிவித்தார்.
அந்த சோதனையின்போது அந்த வீட்டின் பராமரிப்பாளர் என நம்பப்படும் ஆடவர் நான்கு சக்கர வாகனத்தை அங்கேயே கைவிட்டுவிட்டு ஜாலான் கூலிம் – பாலிங் காட்டுப் பகுதி வழியாக தப்பியேடினார். அந்த வாகனத்தின் உரிமையாளரை நாங்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் கூலிம் மாவட்ட போலீஸ் தலைமையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்னளர். ஆட்கடத்தல் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக ஷாபி அகமட் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!