Latestமலேசியா

மரணத்திலும் ஒன்றிணைந்த குணசேகரன் –நவநீதம் தம்பதியரின் உடல் தகனம்

கோலாலம்பூர், மே 22 – மாரடைப்பினால் அடுத்தடுத்து மரணத்தில் ஒன்றிணைந்த   குணசேகரன் – நவநீதம்  தம்பதியரின்  உடல்கள்  இன்று பூச்சோங் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பூச்சோங்  14 தேசிய தொடக்க நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த  57 வயதுடைய  குணசேகரன்   கிருஷ்ணன்  மற்றும் அவரது மனைவியான 55 வயது நவநீதம்  முனியாண்டி ஆகிய இருவரும்  புதன்கிழமை  இரவு  11.30  மணி அளவில்   மாரடைப்புக்கு உள்ளானதைத் தொடர்து  மரணம் அடைந்தனர்.

ஏற்கனவே இருதய நோயினால்  சிகிச்சை பெற்று வந்த   நவநீதம்  புதன்கிழமையன்று மாரடைப்பின் காரணமாக திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக  ஆம்புலன்ஸ்  வரவழைக்கப்பட்டதைத் தொடர்ந்து  அவரை  செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அவரது  உடல்  ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது.  கூடவே அவரது கணவர் குணசேகரன்   ஆம்புலான்ஸில் உடன் செல்லுவதற்கு  தயாராகி வீட்டை விட்டு வெளிவருவதற்குள் அவரும் திடீரென மாரடைப்பு உள்ளாகி மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது . இதனை தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

இவ்விருவரும் மாரடைப்பினால் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். சவ பரிசோதனைக்குப் பின்  வியாழக்கிழமை அவர்களது சடலம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று  பூச்சோங் உத்தாமாவில் உள்ள அவர்களது வீட்டில் நடைபெற்ற இறுதி சடங்கிற்கு பின் அவர்களது உடல்கள்  தகனம் செய்யப்பட்டது. இந்த தம்பதியருக்கு    28 வயது மற்றும் 23வயதில் இரண்டு   பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவர் மற்றும் மனைவி இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த இந்த துயரச் சம்பவம்  சமுக வலைத்தலங்களில் பகிரப்பட்டதோடு பலர் தஙகளது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டனர்.

மலேசிய திறந்த வெளி பல்கலைக்கழகத்தின்  பட்டதாரி ஆசிரியரான  குணசேகரன்  பள்ளி ஆசிரியரோடு பல மாணவர்களுக்கு டியூசன் வகுப்புகளை  சொல்லிக்கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. சமயத்துறையிலும் நல்ல ஈடுபாடு காட்டிவந்த குணசேகரன்  அனைவரிடமும் இன்முகத்தோடு பழக்க்கூடியவர் என்பதோடு  ஆலய நடவடிக்கைகளிலும் நல்ல ஈடுபாடு காட்டி வந்தவர் என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!