Latestமலேசியா

மலேசியாவில் சிக்கிக்கொண்ட இந்திய பிரஜைகள் சனிக்கிழமை சிறப்பு விமானத்தில் தாயகம் திரும்புவர்

கோலாலம்பூர். ஜூலை 8 – மலேசியாவில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய பிரஜைகள் எம்.ஏ.எஸ் சிறப்பு வாடகை விமானம் மூலம் எதிர்வரும் சனிக்கிழமை காலை மணி 11.45 அளவில் சென்னை திரும்புவார்கள். கோவிட் தொற்று பரவலை தடுப்பதற்கு இந்தியா வெளிநாடுகளுக்கான விமானச் சேவையை நிறுத்தியது. அதோடு இதர வெளிநாடுகளின் விமானங்கள் தரையிறங்குவதற்கும் இந்தியா அனுமதி வழங்கவில்லை.
இதனால் மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாடு ஆணைக்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக இங்கு வந்த இந்திய சுற்றுப்பயணிகள் மற்றும் இங்கு வேலை முடிந்தவர்கள் உட்பட இந்திய பிரஜைகளில் பலர் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர். அதோ போன்று சென்னையிலிருந்தும் மலேசியர்களில் பலர் கோலாலம்பூர் திரும்ப முடியாமல் இருந்து வருகின்றனர். இப்படி இரு நாடுகளிலும் சிக்கிக் கொண்டவர்கள் தங்களது தாயகம் திரும்புவதற்கு உதவும் பொருட்டு கிள்ளான் கே.பி,எஸ் பயண நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.பி சாமி சில நல்ல உள்ளங்களின் ஆதரவோடு எம்.ஏ,எஸ் சிறப்பு வாடகை விமானத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த விமானம் சென்னையில் தரையிறங்குவதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆகக்கடைசி விவரங்களை கே.பி,சாமி வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!