Latestமலேசியா

மலேசியாவில் 130 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று கண்டுள்ளது; மொத்த எண்ணிக்கை 1030

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 20 – மலேசியாவில் நாளுக்கு நாள் கோவிட் 19ன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 130 பேருக்கு கோவிட்-19 தொற்று நோய் தாக்கம் கண்டுள்ளது. இதன்வழி மலேசியாவில் கோவிட்-19னால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1030ஆக உயர்ந்துள்ளது.

130 பேரில் 48 பேர் ஶ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைப்பெற்ற சமய நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களாவர். இதுவரையில் 26 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப இன்று அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87ஆகும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் இஸ்ஸாம் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!