Latestஉலகம்

மலேசியாவுடன் எல்லையை திறப்பதற்கு கட்டம் கட்டமாக நடவடிக்கை சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்

சிங்கப்பூர், ஜூன் 24- சிங்கப்பூரில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் அங்கு வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானமின்றி நிதிச் சுமையில் பரிதவித்து வரும் நிலையில் மலேசியாவுடனான எல்லையை திறப்பதற்கு சிங்கப்பூர் கட்டம் கட்டமாக நடவடிக்கையை எடுத்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன கூறியுள்ளார். எல்லையை கடந்து சிங்கப்புருக்குள் நுழையும் பொதுமக்களைச் சரியான முறையில் பரிசோதிப்பது, கோவிட் தொற்று கண்டவர்களை அடையாளம் காண்பது போன்ற நடவடிக்கையிலும் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் –மலேசியாவுக்கிடையிலான பயண ஏற்பாடுகளை தொடங்குவதற்கான பல்வேறு ஏற்பாட்டு நடவடிக்கைகள் இரண்டு தரப்பிலும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். இன்னும் சில நாட்கள் அல்லது வாரங்களில் இரு நாடுகளுக்குமிடையே எல்லையை கடந்து பயணச் சேவைகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடு செயல் திட்டங்களில் முனைப்பு காட்டப்படும் என விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

எனினும் முக்கிய அம்சமாக பொதுமக்களின் சுகாதார நலனிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசிய மக்களின் பொது சுகாதாரத்தையும் நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஜோகூர் மற்றும் சிங்கப்பூருக்மிடையிலான பரபரப்பான தரைவழி எல்லையை கடக்கும் போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிலும் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் பல்வேறு விவகாரங்களை விரிவாக கையாள வேண்டியதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம் என விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!