Latestமலேசியா

மாநில எல்லைகளைக் கடந்து சென்ற 14 பேருக்கு அபராதம்

கோலாலம்பூர் ,  மே 25 – சட்டவிரோதமாக  மாநில எல்லையை கடந்து சென்று தத்தம் கிராமங்களில் நோன்பு பெருநாள் கொண்டாடிக் கொண்டிருந்த 14 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

.நிபந்தனைக்குட்பட்ட  நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின்  நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளை  கடைபிடிக்காத காரணத்தால் வீட்டில் கொண்டாட்டத்தில் திளைத்திருந்த அவர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக தற்காப்பு துறைக்கான முதன்மை அமைச்சர்  இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

இது தவிர மாநில எல்லைகளைக் கடக்க முயன்ற 214 வாகன ஓட்டுனர்களுக்கு எதிராக அபராதத்திற்கான குற்றப்பதிவு வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

நேற்று மாநிலங்களின் எல்லையை கடக்க முயன்ற 1,243 வாகனங்கள் வழிமறித்து திரும்ப அனுப்பி வைக்கப்பட்டன.  சிலாங்கூரிலிருந்து 685 வாகனங்களும், நெகிரி செம்பிலானிலிருந்து 133வாகனங்களும் , பகாங்கிலிருந்து 72 வாகனங்களும் சாலை தடுப்பு சோதனைக்குப் பின்னர் பின்னர் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!